
பொதுவாக ஹீரோ கால்ஷீட் க்கு தான் போட்டி அதிகமாக இருக்குமானால் நயன்தாரா விஷயத்தில் அதுக்கு உல்டா என்று தான் சொல்லணும் ஆம் சூப்பர் ஸ்டார் போல இவங்க லேடி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இவர்களுக்கும் பல பொறுத்தங்கள் உண்டு வயதாக வயதாக வாய்ப்புகளும் ஸ்டைலும் அதிகமாக போய் கொண்டு இருக்கிறது தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா நடித்தால் நல்ல இருக்கும் என்று ரஜினி ஆசைபடும் அளவுக்கு வில்லங்கமான பாத்திரம் பாருங்க
ரஜினி நடித்த சந்திரமுகியில் அவருக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு குசேலனில் இருவருமே நடிகர் – நடிகையாகவே நடித்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் நயன்தாரா.
இந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திலும் இணைந்துள்ளார் நயன்தாரா. ஆனால் இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக அல்லாமல் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
அதேபோல் ரஜினிக்கு மகளாக பாபநாசம் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
