Wednesday, February 12
Shadow

மெஹந்தி சர்க்கஸ் -திரைவிமர்சனம் (கவித்துவமான காதல் )Rank 3.5/5

இயக்குனர் ராஜு முருகன் எழுத்துகள் என்றாலே அதில் மிக பெரிய பலமான கருத்துகள் இருக்கும் அது சமுக அக்கறையாக இருக்கட்டும் இல்லை காதலாக இருக்கட்டும் கூக்கு படம் மூலம் ஆழமான காதலை சொன்ன ராஜு முருகன் இந்த முறையும் ஒரு அழுத்தமான அர்த்தமுள்ள உண்மை கலந்த கற்பனை காதல் கதையை நமக்கு மெஹந்தி சர்கஸ் என்று சொல்லி இருக்கிறார். வருத்தம் கதை திரைகதை மட்டும் தான் இயக்கம் அவரில்லை அவரின் அண்ணன் சரவண ராஜேந்திரன்

இயக்குனர் கதையின் ஆழம புரிந்து மிக சிறந்த காட்சிகள் மூலம் அழகிய கவிதையாக கொடுத்துள்ளார் கதைக்கு தேவையான நட்சத்திரங்கள் ஆழமான கதாபாத்திரத்துக்கு ஏற்ப நட்சத்திரங்கள் குறிப்பாக கதாநாயன் மற்றும் கதாநாயகி தேர்வு ஒவ்வொரு பாத்திரமும் மிக சரியாக பொருந்தியுள்ளது ஒவ்வொருவரும் கதாபாத்திரம் புரிந்து உயிர் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவுக்கு நீண்ட இடைவெளிக்கு வித்தியாசமான கதை களம் சிவாஜி கணேஷன் நடித்த குலமகள் ராதைக்கு பின் மீண்டும் சர்கஸ் கதை களத்தில் வெளிவந்துள்ள காதல் கதை அதுவும் மிகவும் அழுத்தமான காதல் கதை என்று சொன்னால் மிகையாகது சர்கஸ் என்று சொன்னதும் குரங்கு சிங்கம் புலி பப்பூன் வைத்து குழந்தை தனமாக இல்லாமல் உணர்வு பூர்வமான காதலை சொல்லி இருகிறார்கள் .

சரி படத்தில் நடித்தவர்களை பார்ப்போம்,மாதம்பட்டி ரங்கராஜ்  ஸ்வே தா திருபாதி, RJ.விக்னேஷ்  வேல ராமமூர்த்தி ,அன்கூர் விகால் ,மாரிமுத்து ,பூஜா ,சன்னிசார்லஸ் மற்றும் ஷான்ரோல்டன் இசையில் செல்வாகுமார் SK ஒளிப்பதிவில்   ராஜு முருகன் கதை வசனத்தில் சரவணா ராஜேந்திரன் திரைகதை இயக்கத்தில் மெஹந்தி சர்க்கஸ்

சரி படத்தின் கதை மற்றும் விமர்சனம் பார்ப்போம்

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச்  சேர்ந்த ஜாதி ஆணவம்  கொண்ட நபரான ராஜாங்கத்தின் ( மாரிமுத்து) மகனும் , ராஜ கீதம் மியூசிகல்ஸ் நடத்திக் கொண்டு காதல் பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கொடுத்து அதன் மூலம் பல சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் நடக்க காரணமாக இருப்பவனுமான ஜீவாவுக்கு ( மாதம்பட்டி ரங்கராஜ்)

அந்த ஊருக்கு  சர்க்கஸ் நடத்த வரும் வடநாட்டுக் குடும்பம் ஒன்றின் பெண் மகளும் , சர்க்கஸில் முக்கிய அங்கம் வகிப்பவளுமான மெஹந்தி ( ஸ்வேதா திருபாதி) மீது காதல் வருகிறது .
இளையராஜாவின் தமிழ்ப் பாடல்களும் பழைய இந்திப் பாடல்களும் அவளையும் காதலை ஏற்க வைக்கிறது .

சர்க்கஸில் மெஹந்தி ஒரு மரப்பலகையின் முன்னால் நிற்க, அவளைச் சுற்றி கத்தி வீசி (சற்று கத்தி குறி தப்பினாலும் உயிராபத்து) பார்ப்பவர்களை விதிர் விதிர்க்க வைக்கும் சாகசம் முக்கியமான ஒன்று . அப்படி கத்தி வீசும் நபர் ஜாதவ் (அங்கூர் விகாஸ் ).

ஜீவா – மெஹந்தியின்  காதல்,  மெஹந்தியின் அப்பாவான  சர்க்கஸ் உரிமையாளருக்கு (சன்னி சார்லஸ் )பிடிக்கவில்லை . ஆனால் ஜீவா உறுதியாக இருக்கிறான் . பிழைக்க வந்த இடத்தில் பகைத்துக் கொள்ள முடியாத அந்த அப்பா , ”மெஹந்தியை நிற்க வைத்து அவள் மீது படாமல் எல்லா கத்திகளையும் வீசிவிட்டால் என் மகளை உனக்கு தருகிறேன் ” என்கிறார் .

அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்க, காதலுக்கு உதவும் பாதிரியார் ஒருவர் ( வேல. ராம மூர்த்தி) உதவியுடன் காதலர்கள் தப்பிக்க , துரோகம் ஒன்று காதலர்களை காட்டிக் கொடுக்கிறது .
காதல் பிரிக்கப்படுகிறது . காதலி தெரியா தூரம் போய் விடுகிறாள் . காதலனின் தேடும் முயற்சியிலும் ஒரு வஞ்சகப் பொய்மை முட்டுக்கட்டை போடுகிறது .

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு , கொடைக்கானலில் மதுவும் பாடல்களுமாய் கத்தி வீசிப் பழகிக் கொண்டு வாழ்ந்து வரும் காதலனை தேடி, மகாராஷ்டிராவில் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் காதலியின் மகள் வர , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மெஹந்தி சர்க்கஸ்.

படத்தில் ஒவ்வொருவரும் தன் கதாபாத்திரம் அறிந்து நடித்துள்ளனர் குறிப்பாக நாயகி ஸ்வேதா திரிபாதி தன் நடிப்பால் நம்மை கவர்ந்து இருக்கிறார் அதேபோல அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த இருவரும் கதை ஓட்டம் தெரிந்து மிகவும் உணர்வு பூர்வமாக நடித்து கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர் என்றால் நிச்சயம் மிகையாகது இந்த இருவரும் நிச்சயம் தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் .

அதேபோல இதுவரை மிகவும் விளையாட்டாக காமெடி என்ற பெயரில் நம்மை சிரிக்க வைத்த RJ விக்னேஷ் நம் கவனத்தை ஈர்த்து உள்ளார் . வேல ராமமூர்த்தி இயக்குனர் மாரிமுத்து நாயகி அப்பாவாக வரும் அறிமுக நடிகர் சன்னி சார்லஸ் மிகவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் நம்மை கவருகிறார்.

படத்தின் மேலும் பலம் என்றால் ஷான்ரோல்டன் இசை கதைக்களம் புரிந்து பாடல்களும் பின்னணி இசையுளும் நம்மை ரசிக்க வைத்துள்ளார் அதேபோல படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வாகுமார் SK அற்புதமான காட்சியமைப்பு மூலம் நம்மை ரசிக்கவைத்துள்ளர்.

இயக்குனரின் கவித்துவமான திரைகதை மூலம் நம்மை மிகவும் ரசிக்கவைத்துள்ளர் இயக்குனர் ராஜு முருகன் எண்ணத்தை சிதைக்காமல் சிந்திக்க வைக்கும் திரைகதை மூலம் நம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர் சரவணா ராஜேந்திரன் .

மொத்தத்தில் மெஹந்தி சர்க்கஸ் கவித்துவமான கவிதை Rank 3.5/5