Saturday, September 24
Shadow

மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஊடகங்களில் பெரும் வதந்திகளாக இருந்தது இதற்க்கு காரணம் சூர்யா படத்தில் நடிக்க கூப்பிட்டதுக்கு நடிக்க வரவில்லை அதுனால இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஒரே அரசல் புரசல் அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அதே படத்தில் கேமியோ செய்கிறார் நயன்.

‘நானும் ரெளடிதான்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால் படப்பிடிப்பில் நவம்பர் 2ஆம் தேதிதான் சூர்யா கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றது.

Leave a Reply