Monday, January 12
Shadow

ஜெய் நடிக்கும் நீயா2 படத்தின் அப் டேட்

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. படத்தின் நாயகனாக ஜெய். இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர்படமாக ரூ.10 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது” என்றார்.