புருவத்தை அசைத்து அசைத்தே இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பிறகு புருவ அழகி என்று சொல்லப்படும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அவரைப் பல நடிகர்கள், நடிகைகள் பாராட்டி அவருடைய ரசிகர்களாகவும் மாறினார்கள். பிரியா வாரியரின் தாக்கம் ஹிந்தித் திரையுலகிலும் எதிரொலித்தது. ரிஷி கபூர் வரை கவர்ந்தார் பிரியா.
தற்போது பிரியாவுக்கு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ள ‘சிம்பா’ படத்தில் நாயகியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தின் நாயகனாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
இன்னும் பிரியா வாரியர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவரைத் தேடி ஹிந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது ஆச்சரியமானதுதான்.