எனக்கு பின்னால், பாரதிய ஜனதா கட்சி இல்லை; கடவுளும், மக்களும் தான் உள்ளனர்,” என, நடிகர் ரஜினி கூறினார்.
இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற ரஜினி, நேற்று சென்னை திரும்பினார். பின், போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில், அவர் கூறியதாவது:
ஜம்மு, ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என, நினைத்தேன். ஒன்பது ஆண்டுகளாக வாய்ப்பு அமையவில்லை; இப்போது தான், அதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மனம் நிம்மதியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது.
திரைத்துறையின் அறிவித்துள்ள, ஸ்டிரைக்கை விரைவில் முடிக்க வேண்டும்; அனைவரும், மீண்டும் பழையபடி வேலைக்கு செல்ல வேண்டும்.
எந்த பிரச்னைக்கும், ஸ்டிரைக்தீர்வாகாது. மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. இன்னும், 14 மாவட்டங்களுக்குநிர்வாகிகள் நியமிக்கப்பட்டதும், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
ஈ.வெ.ராமசாமி சிலையை உடைத்தது, கடுமையாக கண்டிக்கத்தக்கது; இது, காட்டு மிராண்டிதனமான செயல். தமிழகம் மதச்சார்பற்ற நாடு. இங்கே மதக் கலவரத்திற்கு, எந்த வகையிலும் இடம் தரக்கூடாது. அரசு நிச்சயம் பாதுகாக்கும்.
எனக்கு பின்னால்,பா.ஜ., இல்லை; கடவுளும், மக்களும் தான் உள்ளனர். இதை, ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்; பலமுறை தெளிவு படுத்தி விட்டேன். எத்தனை முறை, இதை நான் சொல்வது!தமிழ் புத்தாண்டு அன்று கட்சி பெயர், கொடிஅறிவிக்க போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, நான் ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன்.
சுப்ரீம் கோர்ட் அறிவித்தபடி, வாரியத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமைக்க வேண்டும். இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு,மாநில அரசு அழுத்தம் தரவேண்டும்.காவிரி விவகாரத்தில், கமலின் குற்றச்சாட்டுக்கு, நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்
ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் அவரின் தொண்டர்களுக்கும் ஒரு. எமாற்றம் எண்று தான் சொல்லனும் காரணம் கட்சி கொடி மற்றும் பெயர் தர்போதைக்கு இல்லை என்ற அரிவிப்பு