Friday, March 28
Shadow

தமிழில் மட்டும் இல்லை ஹிந்திலும் மாஸ் என்று நிருபித்த அஜித்

2001-ல் ஷாரூக்கான் நடித்த அசோகா என்ற சரித்திர படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார் அஜித். அதன்பிறகு அவர் எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்த வேதாளம் இந்தியில் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு யு-டியூப்பில் வெளியான அப்படத்தை நான்கு நாட்களில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.

விளைவு, அஜித் படங்களுக்கு இந்தி ரசிகர்களிடம் கிடைத்த இந்த வரவேற்பு காரணமாக அஜித் நடித்த வேறு சில சூப்பர் ஹிட் படங்களையும் இந்தியில் டப் செய்து வெளியிடும் வேலைகள் துரிதமாக நடக்கிறது. அந்த பட்டியலில் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களும் சேர்ந்துள்ளது. இந்த படங்களையும் இந்தியில் டப்பிங் செய்து யு-டியூப்பில் வெளியிடப்போகிறார்களாம்.

Leave a Reply