Monday, July 6
Shadow

ஓ  மை கடவுளே – திரைவிமர்சனம் (நவரசம் ) Rank 4/5

காதலுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் மரியாதை உண்டு அந்த வகையில் ஒ மை கடவுளே படதுக்கும் மரியாதை உண்டு ஆம் நட்புக்கும் காதலுக்கும் உள்ள நூல் வித்தியாசத்தை மிக அழகாக சொல்லி இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது. மிக சிறந்த திரைகதை மூலம் ஜனரஞ்சகமான முறையில் இயக்கி உள்ள ஒரு காதல் கவிதைஎன்று சொல்லலாம்  படத்தில் ஒரு இடத்தில் குட முகம் சுளிக்க முடியாது அந்த அளவுக்கு அருமையான முறையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

படத்தில் அசோக் செல்வன் ,ரித்திகா சிங், வாணி போஜன் , எம்.எஸ்.பாஸ்கர் ,செய்திவாசிப்பாளர் சுஜாதா, ஷாரா,நட்புக்காக விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் விது அயன்னா ஒளிப்பதிவில் லியோன் ஜேம்ஸ் இசையில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் காதல் கவிதை நட்பின் நவரசம் தான் ஓ  மை கடவுளே.

என்னடா இவன் காதலும் கவிதையும் நட்பும் நவரசமும் என்று சொல்ல்கிறானே என்று யோசிக்கிறீர்கள் இல்லையா அது தான் இந்த படத்தின் கதை .

LKGயில் இருந்து எஞ்சினரிங் படைக்கும் வரையான நட்பு அசோக் செல்வனுக்கும் ரித்திகா சிங்க்கும்  இவர்களின் சீனியர் வாணி போஜன் இந்த மூவரை சுற்றிதான் கதை.ரித்திகா சிங்க்கு மாப்பிள்ளை பார்கிறார்கள் அதை நண்பன் அசோக் செல்வனிடம் சொல்கிறார் ரித்திகா அதற்கு எந்த வித ரியாக்க்ஷன் செய்யாத அசோக் செல்வன் முன் பின் தெரியாத ஒருவனை எப்படி திருமணம் செய்வது என்று தன் நண்பனிடம் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்ல அவனும் போதையில் சரி என்று சொல்கிறான்.

இதன் மூலம் வேலையில்லாமல் இருக்கும் அசோக் செல்வனுக்கு தன் கம்பனியிலே வேலை கொடுத்து தன் மகள் ரித்திகா ஆசையை நிறைவேற்றுகிறார் எம்.எஸ்.பாஸ்கர் நட்பு திருமணத்தில் முடிகிறது . ஆனால் நண்பியை மனைவியாக அசோக் செல்வனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை இருந்தும் இவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

இவர்களின் வாழ்வில் பூகம்பமாக வருகிறார்.சீனியர் வாணி போஜன் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும் அசோக் செல்வன் வாணி போஜன் இது பிடிக்காத ரித்திகா இதனால் இவர்கள் வாழ்வில் ஏற்படும் சந்தேகம் விவகாரத்து வரை போகிறது இந்த இருவரும் மீண்டும் இணைந்தார்களா இல்லை பிரிந்தார்களா என்பதை மிகவும் பேண்டசியாக நகைசுவையாக அர்த்தத்துடன் சொல்லி இருக்கும் படம் தான் ஓ மை கடவுளே .

படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது இயக்குனர் என்று சொல்ல தோன்றும் அதுபோல இயக்குனரின் வெற்றிக்கு மிக முக்கியம் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் தான் இருவரும் நடித்து இருகிறார்களா இல்லை வாழ்ந்து இருகிறார்களா என்று தோன்ற வைக்கிறது அப்படி ஒரு இயல்பான ஒரு நடிப்பு மூலம் நம்மை கவர்ந்து இருக்கிறார்கள்.

அசோக் செல்வன் மிக சிறந்த நடிகர் என்று நமக்கு தெரியும் பல படங்களில் நாம் பார்த்தும் இருக்கிறோம் ஆனால் ரித்திகா நம்மை அனைத்து நவரசதிலும் நம்மை மிரட்டுகிறார் என்று தான் சொல்லணும் அதேபோல நன்பணாக வரும் சாரா படத்துக்கு மேலும் பலம் நகைசுவையிலும் சரி நம்மை ரசிக்க வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி கொஞ்ச நேரம் வரவில்லை அதிகம் வருகிறார் நம்மை கலகலவென சிரிக்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். அதேபோல முதல் படத்திலே தன்னை நிலைநிறுத்தியுள்ளார் வாணி போஜன்.

படதில்ன் மேலும் பலம் பின்னணி இசையும் பாடல்களும் என்று சொல்லணும் அதிலும் பின்னணி இசை நம்மை மெய்மறக்கவைக்கிறார் லியோன் ஜேம்ஸ் அதேபோல படத்துக்கு மேலும் பலம் படத்தின் ஒளிப்பதிவாளர்  விது அயன்னா

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம் மக்களின் ரசனை அறிந்து ஒரு படத்தை கொடுத்துள்ளார் மன அழுத்தம் நிறைந்த இந்த உலகத்தில் இப்படியான படங்கள் நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணும் கொடுக்கும் காசுக்கு நிச்சயம் பலன் உண்டு நல்ல படம் நம்பிக்கியா போய் பாருங்க

நல்ல படங்களை தயாரிக்கும் அக்ஸ்ஸ் நிறுவனம் ராட்சசன் படத்துக்கு பிறகு மேலும் ஒரு சிறந்த படத்தை கொடுத்துள்ளார் தயாரிப்பளர் டில்லி பாபு