

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துக்குப் பிறகு தனியாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கார் அசோக் செல்வன்.
தன் கம்பெனி சார்பில் தர்பார் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்து வாரார் அசோக் செல்வன்.
இதில் நாயகியாக ரித்திகா சிங், முக்கியக் கதாபாத்திரங்களில் சாரா, வாணி போஜன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸாகப் போறதா இப்போ தகவல் வந்திருக்குது
ஆங்.. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் – அதுவும் கடவுளா விஜய் சேதுபதி நடிச்சிருக்காராம். ஸ்மால் ரோல்தான் என்றாலும், படத்தின் கதைக்கு அதுதான் மாற்றமாக இருக்கும் என்கிறது படக்குழு.
இந்தப் படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வழங்க அசோக் செல்வன் தயாரிச்சதை சக்தி பிலிம்ஸ் பேகடரி ரிலீஸ் செய்யப் போகுதாம்
