
ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு உலகங்கள்… இசையால் இணைத்த சாம் CS!
ஒரே நாளில் வெளியான இரண்டு படங்கள்… இரண்டு முரண்பட்ட ஜானர்கள்… ஆனால் இரண்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் – இசையமைப்பாளர் சாம் CS.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் CS, தற்போது தனது இசை பயணத்தின் மற்றொரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளார். நேற்று வெளியாகியுள்ள “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” திரைப்படங்கள், ஒரு இசையமைப்பாளராக அவரது பரந்த இசை பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ” திரைப்படம் மனித உணர்வுகள், வாழ்வியல் போராட்டங்கள் மற்றும் நம்பிக்கையை மையமாகக் கொண்ட ஆழமான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. இப்படத்தின் உணர்ச்சித் தருணங்களுக்கு உயிரூட்டும் வகையில் சாம் CS வழங்கியுள்ள பின்னணி இசை மற்றும் மெலடிகள், கதையின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
மறுபுறம், இளைஞர்களை கவரும் வகையில் ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள “டபுள் ஆக்குபன்ஸி” திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இசை அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார். துடிப்பான இசை, சமகால சவுண்ட் டிசைன் மற்றும் புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இசை மொழி, படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.
ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களுக்கும், அவற்றின் தனித்துவமான கதைக்களம் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்றவாறு இசையை வடிவமைத்திருப்பது, சாம் CS-ன் இசை புரிதலையும் பல்துறை திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
சமீப காலமாக தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் சாம் CS, தற்போது பல முக்கியமான படைப்புகளில் பணியாற்றி வருகிறார்.
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படம், ரவி மோகன் நடிக்கும் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” உள்ளிட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் தனுஷ் இணையும் புதிய படைப்பிலும் அவர் இசையமைக்கவுள்ளார்.
பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகங்களிலும் தொடர்ந்து புதிய வாய்ப்புகளைப் பெற்று வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவங்களை வழங்கி இந்திய திரையுலகின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார்.

One Composer, Two Contrasting Worlds: Sam CS Showcases His Musical Versatility with Dual Releases
Two films released on the same day. Two completely different genres. Yet, one name has emerged as a common factor behind both cinematic experiences – music composer Sam CS.
Known for carving a distinct identity in Indian cinema with his unique musical style, Sam CS has once again demonstrated the breadth of his talent through the recently released films Habibi and Double Occupancy. The two projects highlight his ability to adapt his music to vastly different storytelling formats and emotional landscapes.
Based on true events, Habibi is an emotionally charged film that explores human resilience, pain, hope, and life’s struggles. Sam CS has enriched the narrative with a deeply moving soundtrack and evocative background score that amplifies the emotional impact of the film. His music continues to resonate with audiences long after the scenes unfold on screen.
In contrast, Double Occupancy takes viewers into a vibrant fantasy-driven world crafted for contemporary audiences. Blending entertainment, imagination, and youthful energy, the film demanded a completely different musical approach. Sam CS has delivered a dynamic and modern soundscape that perfectly complements the film’s unique universe, creating an engaging and immersive experience for younger viewers.
What makes this achievement noteworthy is the stark difference between the two films. From genre and tone to storytelling style and audience appeal, Habibi and Double Occupancy occupy entirely different creative spaces. By successfully composing music that serves both worlds with equal effectiveness, Sam CS has once again reaffirmed his versatility as a composer.
Over the years, Sam CS has earned recognition not only for his impactful background scores but also for his memorable songs. His ability to understand the emotional core of a story and translate it into music has made him one of the most sought-after composers in Indian cinema today.
Beyond Tamil cinema, he continues to attract attention from audiences across multiple languages through his distinctive melodies and innovative musical sensibilities. Currently, he is actively involved in several major film and web series projects across India.
Among his upcoming works are Pushkar-Gayathri’s next directorial venture, Ravi Mohan’s Karate Babu, and Karthi’s Sardar 2. He is also set to collaborate with director H. Vinoth and actor Dhanush on an upcoming project. In addition, several new announcements from Bollywood, Telugu, and Kannada cinema are expected in the near future.
With an expanding portfolio across industries and genres, Sam CS continues to strengthen his position as one of India’s most versatile and in-demand music composers.
