
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பியது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைவரை விடவும் அதிகம் பிரபலமானவர் ஓவியா தான்.
இவர் மன உளைச்சல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், வெளியேறிய இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஓவியா மீண்டும் நான் வர மாட்டேன் என கூறி விட்டார், இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது, ஆனால் உள்ளே எனக்கு ஏற்பட்ட மன குழப்பத்தால் என் அப்பா தான் போக வேண்டாம் என கூறிவிட்டார் என கூறியுள்ளார்.
