Monday, April 27
Shadow

தயாரிப்பு சங்க கோரிக்கை நிராகரித்த பேட்ட படக்குழு அஜித் ரஜினி நேரடி மோதல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் பொங்கல் வெளியீடு என அறிவித்து, ‘விஸ்வாசம்’ படத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ மட்டுமே பொங்கல் வெளியீடாக அறிவித்திருந்தது. திடீரென்று ‘பேட்ட’ படக்குழுவினரின் அறிவிப்பால், விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் உண்டானது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பலரும் முறையிடத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்க இயலுமா என்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், பொங்கல் வெளியீட்டில் உறுதி, அதில் பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்தே பொங்கல் வெளியீட்டு படங்களில் தீர்மானிப்பதிலிருந்து விலகிக் கொண்டது தயாரிப்பாளர் சங்கம்.

‘விஸ்வாசம்’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய இரண்டு படக்குழுவினருமே தங்களுடைய படங்களை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துவிட்டார்கள். இதில் முன்னணியில் இருக்கிறது ‘பேட்ட’ படக்குழு. எப்படியென்றால் 2 பாடல்கள் வெளியீடு, டிசம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, சமூகவலைத்தள தொடர் விளம்பரங்கள், சன் டிவியில் இசை வெளியீட்டு விழா விளம்பரங்கள் என செய்து வருகிறது ‘பேட்ட’ படக்குழுவி

பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெய்லர் என எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் தாமதப்படுத்தி வருகிறது ‘விஸ்வாசம்’ படக்குழு. ஆனால், அப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வேறொரு பாணியை கடைப்பிடிக்கிறது. திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து, அதில் விளம்பர பேனர்களை வைக்க தொடங்கிவிட்டது.

இப்போட்டி விநியோகஸ்தர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இரண்டு படங்களில் ஒன்று பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டுமே ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் என்று விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்துவிட்டது.

முதன்முறையாக ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. அஜித் படத்துக்கு முதல் நாள் ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினி படத்துடன் வரும்போது அந்த ஓப்பனிங் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் நினைக்கிறார்கள்.