
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் ஒரே ஆள் என்றால் அது ரஜினிகாந்த் தான் இவர் சினிமாவில் பேசும் பஞ்ச டைலாக் எல்லரையும் மிகவும் கவரும் இதற்காகவே இவரின் படத்திற்கு ஒரு கூட்டம் செல்லும் என்றால் பாருங்கள் ஆனால் இவர் பேசும் வார்த்தை ஒரு நாளும் சொன்னபடி செய்தது இல்லை என்று தான் சொல்லணும் குறிப்பாக இவர் நான் சொல்லுவதை தான் செய்வேன் செய்யுறதா தான் சொல்லுவேன் என்று சொன்னவர் அடுத்து நான் எப்பவ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது என்று சொன்னவர் அதனால் தான் இவர் அரசியலுக்கு எப்ப வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியவில்லை போல இருக்கு இப்ப இவரின் அரசியல் பிரவேசத்தை பற்றி ஒரு அரசியவாதி மிக மோசமாக கிண்டல் செய்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.0 படத்தின் தயாரிப்பாளரும் லைக்கா நிறுவனத்தின் தலைவருமான திரு. சுபாஸ்கரன் இலங்கையில் வீடு இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு 150 வீடுகளை கட்டியுள்ளார். இதன் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதாக இருந்தது
ஆனால் இதற்கு திருமாவளவன், வைக்கோ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினியை நேரடியாக தொடர்பு கொண்டும் இந்த விழாவிற்கு செல்லவேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து ரஜினி இந்த விழாவுக்கு செல்வது ரத்து செய்தார்.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள பிரபல அரசியல் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, ” ரஜினியும் கமலும் சினிமாவில் மட்டும்தான் வீரர்கள் போல் நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் கோழைகள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
