
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டுள்ளார், இவர் மன அழுத்தம் காரணாமாக தற்கொலைக்கு முயன்றது ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.
ஓவியாவுக்கு மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர், அதில் சிம்புவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்பு, ஓவியா மிகவும் நல்லவர். அவரை போன்ற பெண் கிடைத்தால் நான் உடனே திருமணம் செய்து கொள்ள தயார் என கூறியதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் ஓவியா வெளியே வந்ததும் நானே அவரிடம் ப்ரொபோஸ் செய்யவும் தயங்கமாட்டேன் என கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை உறுதியாகவில்லை, இதற்கு சிம்பு விளக்கம் அளித்தால் மட்டுமே உறுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
