Friday, November 13
Shadow

பார்வையற்ற பெண்ணாக பிரியங்கா மோகனின் சவாலான நடிப்பு… ‘பர்ஃப்யூம்’ படப்பிடிப்பு நிறைவு!

பார்வையற்ற பெண்ணாக பிரியங்கா மோகனின் சவாலான நடிப்பு… ‘பர்ஃப்யூம்’ படப்பிடிப்பு நிறைவு!

ஜெய் – பிரியங்கா மோகன் கூட்டணியில் உருவாகும் ‘பர்ஃப்யூம்’… ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்!

நடிகை பிரியங்கா மோகன் இதுவரை திரையில் ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பர்ஃப்யூம்’. ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வழக்கமான காதல் கதாநாயகியாக அல்லாமல், பார்வையற்ற பெண்ணாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரியங்கா மோகனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், அவரது கதாபாத்திரத்திற்குக் கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற பெண்ணின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் தனது நடிப்பின் மூலம் பிரியங்கா மோகன் எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், இப்படத்தில் பிரியங்கா மோகனின் தந்தையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் படத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவ்வாறு அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.

‘சக்ரா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். பல முன்னணி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியின் அழகிய பின்னணியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ‘பர்ஃப்யூம்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை முன்னணி சர்வதேச ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஜெய் – பிரியங்கா மோகன் இணை, ராஜீவ் மேனனின் முக்கியமான கதாபாத்திரம், யோகி பாபுவின் பங்களிப்பு எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘பர்ஃப்யூம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முற்றிலும் புதிய பரிமாணத்தில் பிரியங்கா மோகனின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Priyanka Mohan Takes on a Challenging Role as a Visually Impaired Woman in ‘Perfume’; Film Wraps Up Shooting!

Jai and Priyanka Mohan headline the film directed by Anand; Netflix acquires its OTT rights

Actress Priyanka Mohan is all set to surprise audiences with a completely different and challenging role in her upcoming film ‘Perfume’, which also stars Jai in the lead role. Moving away from the conventional characters she has portrayed so far, Priyanka plays a visually impaired woman in the film.

Interestingly, the story of ‘Perfume’ revolves primarily around Priyanka Mohan’s character. Her portrayal of a visually impaired woman is expected to be one of the film’s major highlights, raising curiosity among audiences about her performance and the emotional depth she brings to the role.

Veteran cinematographer and filmmaker Rajiv Menon plays a significant character in the film as Priyanka Mohan’s father. Popular actor and comedian Yogi Babu is also part of the cast in an important role.

Directed by Anand, who previously helmed Vishal’s film ‘Chakra’, ‘Perfume’ brings together an interesting combination of performers and technicians. The film’s cinematography is handled by Balasubramaniem, who has worked on several prominent Tamil films.

Shot extensively against the picturesque landscapes of Ooty, the film captures the natural beauty of the hill station as its backdrop.

The makers have now successfully wrapped up the entire shooting schedule, and the post-production work is progressing at a brisk pace.

Adding to the film’s growing anticipation, leading global streaming platform Netflix has acquired the OTT rights to ‘Perfume’. This development is another significant highlight ahead of the film’s theatrical release.

With Jai and Priyanka Mohan sharing screen space, Rajiv Menon and Yogi Babu in pivotal roles, and an intriguing storyline centred on Priyanka’s challenging character, ‘Perfume’ is shaping up to be an interesting cinematic venture.

The film is expected to hit theatres soon. Audiences are particularly looking forward to witnessing Priyanka Mohan in this never-before-seen avatar.