Sunday, February 5
Shadow

சிவகார்த்திகேயன் மீது புகார் கூறிய தயாரிப்பாளர் – ஏன் ?

சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை.

இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது.

இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார்.

அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக தட்டி கழித்த பிரச்சனை தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்திற்கு வந்துவிட்டதாம், பார்ப்போம் தீர்ப்பு என்ன வருகிறது என்று? என அனைவரும் காத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் சிவகார்த்திகேயனின் அதிக படங்களை ரிலீஸ் செய்தது மதன் தான் ஏன் சிவகார்த்திகேயனே மதன் நீங்களே இந்த படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க என்று பொது நிகழ்ச்சியில் கேட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply