ஒரு நல்ல திரைப்படம் தனக்குரிய புகழை தானே தேடிக் கொள்ளும்.அந்த புகழுக்கு மகுடம் சேர்க்கும் அளவுக்கு வேறு பல காரணங்களும் இணைந்து விடும். அதில் பொருத்தமாக அமையும் தலைப்பும் உண்டு. அந்த வகையில் அருள் நிதி நடிப்பில், பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கக்த்தில் இந்த படம் உருவாகிறது தொடர்ந்து தரமான வெற்றி படங்களை கொடுக்கும் Axess film factory இந்த படத்தை தயாரிக்கிறது “புகழேந்தி என்னும் நான்” திரைப் படமும் இடம் பெறுகிறது.
அரசியல் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தில் பிந்து மாதவி அருள் நிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்தது. மற்ற நட்சித்திர விவரங்கள் விரைவில் வெளியாகும் நிச்சயம் இந்த படத்தின் கதை மக்களுக்கு மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்