Saturday, October 10
Shadow

15 ஆண்டுகால மனிதநேயப் பயணத்தில் புதிய அத்தியாயம்: மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’!

15 ஆண்டுகால மனிதநேயப் பயணத்தில் புதிய அத்தியாயம்: மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’!

சென்னை: நம்பிக்கையை விதைத்து, மனிதநேயத்தை முன்னெடுத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கி வரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தனது 15 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற 15ஆம் ஆண்டு விழா, அமைப்பின் கடந்த கால சாதனைகளை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமின்றி, அடுத்தகட்ட சமூகப் பணிகளுக்கான புதிய தொடக்கமாகவும் அமைந்தது.

“நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விழாவில், ரெயின்ட்ராப்ஸ் அமைப்புடன் பயணித்து வரும் ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பயனாளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.

15 ஆண்டுகால பயணத்தைப் பதிவு செய்த சிறப்பு நூல்

விழாவின் முக்கிய நிகழ்வாக, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொண்ட சமூகநலப் பணிகள், முக்கியத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் அந்தப் பணிகளால் மாற்றம் பெற்ற மக்களின் வாழ்க்கைப் பயணங்களைப் பதிவு செய்யும் சிறப்பு நூல் வெளியிடப்பட்டது.

“நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற தலைப்பிலான இந்த நூலை விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் வெளியிட்டார். அதன் முதல் பிரதிகளை வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் சுதா ராமன், இ.வ.ப. ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

விழாவில் விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குனர் விஜிபி ராஜதாஸ், இயற்கை வேளாண் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், டாக்டர் டி.வி. தேவராஜன், ஊடக ஆளுமை ரமேஷ் பிரபா, தொழிலதிபர்கள் பிரித்வி பாலன், பூபேஷ் நாகராஜன், ஆனந்தம் பாகீரதி ராமமூர்த்தி, விளக்குக்கடை ராஜலட்சுமி சிவசங்கரன், மாற்றம் சுஜித் குமார், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதருமான ஏ.ஆர். ரஹைனா விழாவிற்குத் தலைமை வகித்தார். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடந்த 15 ஆண்டுகளாக மனிதநேயப் பணிகளையும் சமூக மாற்றத்திற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன.

மேடையேறிய பயனாளிகள் – தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ராம்ப் வாக்

இந்த விழாவின் கவனம் ஈர்த்த நிகழ்வுகளில் ஒன்றாக ரெயின்ட்ராப்ஸ் சமூகநலத் திட்டங்களின் பயனாளிகள் பங்கேற்ற சிறப்பு ராம்ப் வாக் நடைபெற்றது.

பொதுவாக ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக பார்க்கப்படும் ராம்ப் வாக், இங்கு முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தைப் பெற்றது. தன்னம்பிக்கையுடன் மேடையில் நடைபோட்ட பயனாளிகள், தங்களது திறமைகளையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தினர்.

“உதவி பெறுபவர்கள் மட்டுமல்ல; தங்களுக்கான அடையாளத்தையும் இடத்தையும் உருவாக்கக்கூடியவர்கள்” என்ற எண்ணத்தை இந்த நிகழ்வு அழுத்தமாக எடுத்துக்காட்டியது. கண்ணியம், சம வாய்ப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை முன்னிறுத்திய இந்த நிகழ்வு விழாவின் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

மூத்த குடிமக்களுக்காக உருவாகிறது ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’

15 ஆண்டுகால பயணத்தின் நிறைவில் ரெயின்ட்ராப்ஸ் எடுத்துள்ள முக்கியமான அடுத்தகட்ட முயற்சியாக “ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்” என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச இல்லமாக உருவாக்கப்பட உள்ள இந்தத் திட்டம், ஆதரவற்றோர், புறக்கணிக்கப்பட்டோர், தனிமையில் வாழ்பவர்கள் மற்றும் அன்பும் பராமரிப்பும் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது வெறும் தங்குமிடமாக இருக்காது. மூத்த குடிமக்களுக்கு சத்தான உணவு, மருத்துவ உதவி, அன்றாட பராமரிப்பு, உணர்வுப்பூர்வமான துணை, பொழுதுபோக்கு மற்றும் சமூகத் தொடர்பு என அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் இந்த அன்பகம் உருவாக்கப்பட உள்ளது.

முதுமை என்பது தனிமையின் காலமாக இருக்கக் கூடாது; அன்பும் அரவணைப்பும் கண்ணியமும் நிறைந்த வாழ்க்கையின் மற்றொரு கட்டமாக இருக்க வேண்டும் என்பதே ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’ திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

15 ஆண்டுகளாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே நம்பிக்கையை உருவாக்கி வந்த ரெயின்ட்ராப்ஸ், தற்போது மூத்த குடிமக்களுக்கான இந்த புதிய முயற்சியின் மூலம் தனது மனிதநேயப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

கடந்த 15 ஆண்டுகள் ரெயின்ட்ராப்ஸின் சாதனைகளைக் கொண்டாடும் காலமாக இருந்த நிலையில், அடுத்த ஆண்டுகள் இன்னும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் காலமாக அமையப் போகிறது.

Rain Drops Celebrates 15 Years of Humanity and Social Impact; Announces ‘Rain Drops Anbagam’ for Senior Citizens

Chennai: Rain Drops, a social organisation committed to humanitarian service and social change, has completed 15 years of impactful work. The organisation celebrated its 15th anniversary under the theme “15 Years of Hope, Humanity and Social Impact”, marking not just a milestone in its journey but also the beginning of a new chapter in its commitment to society.

The anniversary celebration brought together prominent personalities, supporters, donors, volunteers, beneficiaries and well-wishers who have been closely associated with Rain Drops and its initiatives over the years.

A Special Book Documenting 15 Years of Change

One of the key highlights of the celebration was the launch of a special book titled “15 Years of Hope, Humanity and Social Impact.” The book documents Rain Drops’ 15-year journey, its major social welfare initiatives, achievements and the inspiring life stories of people whose lives have been positively impacted by the organisation.

The book was launched by Dr. V.G. Santhosam, Chairman of VGP Group. The first copies were received by M.V.M. Velmohan, Correspondent of Velammal Educational Group, and Sudha Raman, I.A.S., of the Tamil Nadu State Planning Commission.

Eminent Personalities Attend the Celebration

The event was attended by several distinguished personalities from different fields, including VGP Rajadoss, Managing Director of VGP Group; environmental agricultural scientist Sultan Ahmed Ismail; Dr. T.V. Devarajan; media personality Ramesh Prabha; entrepreneurs Prithvi Balan and Bhupesh Nagarajan; Anandam Bhagirathi Ramamurthy; Vilakkukadai Rajalakshmi Sivasankar; Maatram Sujith Kumar; and educational psychologist Saranya Jayakumar, among others.

Music composer and Rain Drops’ Goodwill Ambassador A.R. Rahaina presided over the celebration. In the presence of Rain Drops Founder and Chairman Aravind Jaipal, Rahaina appreciated the organisation’s 15 years of dedicated humanitarian service and its continued efforts towards creating meaningful social change.

Beneficiaries Take Centre Stage in a Special Ramp Walk

One of the most memorable moments of the celebration was a special ramp walk featuring beneficiaries of Rain Drops’ various social welfare initiatives.

Walking the ramp with confidence and pride, the beneficiaries transformed the event into a celebration of dignity, inclusion, self-confidence, resilience and equal opportunity, rather than simply a stage performance.

The initiative reflected Rain Drops’ belief that every individual deserves an opportunity to express themselves, showcase their abilities and stand before society with dignity and confidence.

‘Rain Drops Anbagam’ – A Free Home for Senior Citizens

As part of its next phase of humanitarian initiatives, Rain Drops announced the launch of “Rain Drops Anbagam,” a free residential home for senior citizens in Chennai.

The initiative aims to provide a safe, dignified and caring environment for elderly people who are unsupported, neglected, living alone or in need of care and companionship.

Rain Drops Anbagam is envisioned as more than just a shelter. It is planned as a holistic support space offering nutritious food, medical assistance, personal care, emotional companionship, recreational activities and opportunities for social interaction.

The core vision behind the initiative is to ensure that senior citizens do not have to experience their later years in loneliness or without support, but instead have a space where they can live with love, dignity, security and a sense of belonging.

After 15 years of building hope and creating positive change across different sections of society, Rain Drops is now taking its humanitarian mission into a new phase with the launch of this meaningful initiative for senior citizens.

While the past 15 years mark a celebration of the organisation’s achievements, the journey ahead promises to create an even greater impact in the lives of those who need care, compassion and support.