Friday, April 26
Shadow

ராஜவம்சம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

தமிழ் சினிமாதான் நம் கலாச்சாரத்தையும் நம் முன்னோர்களின் மகத்துவத்தையும் இன்றும் பறைசாற்றுகிறது . அப்படியான ஒரு படம் தான் இந்த ராஜவம்சம் கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் ஒரு படம் அதோடு இன்றைய நாகரிகத்தையும் கலந்த ஒரு கலைவையாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் கதிர்வேலு.

புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

நடிகர் சசிகுமார் ஐடி-யில் வேலை பார்கிறார். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய ஒரு புராஜெக்ட் ஒன்றுக்காக பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், இந்த வேலை சசிக்குமாரின் டீம்க்கு கிடைக்குது. இந்த புராஜெக்ட் கிடைக்காததால ஆத்திரமடைந்த மற்ற நிறுவனங்கள் எப்படி இந்த புராஜெக்ட் செய்ய விடாமல் தடுக்க திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில், தனது குடும்பத்தை பார்க்க போன சசிகுமார், தனது காதலி என்று நிக்கி கல்ராணியை போலியாக அறிமுகம் செய்கிறார். பல காரணங்களால்,
நிக்கி கல்ராணியை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை வெளிபடுத்தும் படமாக இந்த படம் உருவாக்கியுள்ளது.

படத்தின் பிளஸ்:

நடிகர்களின் நடிப்பு கதையின் பின்புலம்

படத்தின் மைன்ஸ்:

திரை கதையில் கொஞ்சம் மேலும் கவனம்

மொத்தத்தில் ராஜவம்சம் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகமே.