Wednesday, April 15
Shadow

ஹாலிவுட்க்கு சவால் விடும் ரஜினியின் 2. O

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த், சயின்டிஸ்ட், ரோபோ என ஹீரோ-வில்லனாக நடித்திருந்தார்.

ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாராயை அவர் உருவாக்கிய ரோபோவுக்கும் காதல் ஏற்படுவது. பின்னர் நிஜ ரஜினியும், ரோபோ ரஜினியும் மோதிக்கொள்வதுதான் அந்த படம். அதைத் தொடர்ந்து இப்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின் ரஜினி சயின்டிஸ்டாகத்தான் நடிக்கிறார்.

அந்த வகையில், இந்த படத்தில் அவர் சில ராட்சஸ பறவைகளை உருவாக்குகிறாராம். அந்த பறவைகளில் ஒருவராகத்தான் அக்சய்குமார் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இயந்திர பறவையான அக்சய்குமார், ரஜினிக்கு எதிராவதும், அதன்பிறகு அவரை ரஜினி அழிப்பதும்தான் இந்த படமாம்.

எந்திரன் படத்தை விடவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகும் சயின்ஸ் படங்களுக்கே சவால் விடக்கூடிய வகையில் இருக்கும் என்கிறார்கள்.

Leave a Reply