Saturday, March 22
Shadow

ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா?

ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2010இல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நான்கு மாதங்களாக அஸ்வின், சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சௌந்தர்யா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply