Monday, June 15
Shadow

பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் படம்

சர்கார் வெற்றியோடு பல சர்ச்சைகளை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் ராஜினிகத்துடன் இணைகிறார். பல சர்ச்சைகள் இருந்தும் ரஜினி இவர் படத்தில் நடிப்பது படத்தின் கதை தானாம் இந்த படத்துக்கும் ஆரம்பமே கொஞ்சம் அப்படி இப்படி தான் காரணம் ஏ.ஆர்முருகதாஸ் தயார் ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது தான் இன்னும் முடிவாகவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வரும் ஜனவரி-1௦ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ள ரஜினி ‘பேட்ட’ படம் ரிலீஸுக்கு முன்பாக சென்னை திரும்புகிறார்.

அதையடுத்து, வரும் பிப்ரவரியில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறதா அல்லது லைகா நிறுவனம் தயாரிகிறதா என்கிற பேச்சுவார்த்தை மட்டும் தற்போது வரை இழுபறியாகவே ஓடிக்கொண்டிருக்கிறதாம்.இயக்குனர் தயார் கதை தயார் ஆனால் தயாரிப்பாளர் இன்னும் இல்லை இருந்தும் குழு பிப்ரவரி மாதம் படபிடிப்புக்கு திட்டமிட்டுள்ளனர் . #rajinikanth #armurugadoss #lyca