Tuesday, February 11
Shadow

ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள் இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் காரணம் வசூல் மன்னன் என்பதால் அதை இந்த வயதிலும் செய்து காட்டி வருகிறார். அதனால் இன்னும் அவரின் மாஸ் குறையவில்லை இந்த சூழ்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுகிறது ஏன் தெரியுமா?

ரஜினியின் திரைஉலக வாழ்க்கையின் கடைசி படமாக அமையப்போகும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப்போவதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த படத்தில் தலைவரை முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடைபெறுகிறதாம்.

இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.