Saturday, April 18
Shadow

தனது கட்சியில் தவறு செய்பவர்களை களையெடுக்க: ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்தார் ரஜினி

தமிழக அரசியலில் தற்பொது அதிரடியாக அரசியலில் ஈடுப்பட்டு வருவது என்றால் கமல் ஹாசன் அடுத்து ரஜினிகாந்த் இந்த் இருவருக்குல் இருக்கும் மறைமுக போட்டி அதிகம் என்று தான் சொல்லனும் இதில் கமல் கட்சி என்பது மக்களிடம் பெரும் தாக்கதை உண்டு பண்ணியுள்ளது என்று சொன்னால் மிகையாகது.இந்த நேரதில் ரஜினிகாந்த் தனது கட்சியில் களை எடுப்பை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார். அதற்காக தற்போது மாவட்டம் மற்றும் கிளை வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த பணி கிட்டத்தட்ட முடிவடைந்திருக்கிறது. அமைக்கப்பட்ட குழுவினர் பற்றி பல தரப்பிலிருந்தும் புகார்கள் வருகிறது. இதனால் தவறான நபர்கள், தவறு செய்கிறவர்களை பற்றி விசாரித்து களையெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்தராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புகார்கள் மற்றும் கருத்துக்களை இந்த குழுவினரிடம் மன்றத்தினர் தெரிவிக்கலால் இந்த குழு மாதம் ஒரு முறை கூடி விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.