Saturday, April 18
Shadow

தான் ரசிகர்கள் எப்படி இருக்கவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள்

தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரப்போக போகும் நம்ம சூப்பர்ஸ்டார் தற்போது மும்முரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் முதலில் விவசாயிகளுக்கு தேவையான நலன்களை செய்யும் படியான நல வாரியங்கள் அமைக்க முடிவெடுத்து அதற்கான வேளைகளில் தன் ரசிகர்களோடு ஆலோசித்து வருகிறார் இந்த நேரத்தில் தன் ரசிகர்களை பற்றியான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்

ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ கான்பிரசிங் மூலம் உரையாற்றினார்.

அந்த வீடியோவில், ரசிகர்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால் போதும். மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர். குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என ரஜினி அறிவுரை வழங்கி உள்ளார்.