Saturday, November 2
Shadow

நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் .. ஆன்மீக அரசியலுக்கு ரஜினிகாந்த் விளக்க

ஆன்மீக அரசியல் குறித்து சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ” ஆன்மீக அரசியல் என்பது மக்களுக்கான அரசியல். ஊழலற்ற அரசியல்தான் ஆன்மீக அரசியல் ” என்றார்.

மேலும் ”சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிக அரசியல். இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மீக அரசியல் ” என்றார் .
இவரது ஆன்மீக அரசியல் விளக்கத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்.