
சாய்பல்லவியின் தங்கையாக நடிக்கும் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன்! – ஜனவரி 29-ல் வெளியாகிறது ‘இஞ்சி வெல்லம்’!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். அந்த வகையில், விஜய் சேதுபதி – சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சாய்பல்லவி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற இருவரும் முதன்முறையாக இணைந்து நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்த மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன், இப்படத்தில் சாய்பல்லவியின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ள சரஸ்வதி மேனன், தற்போது தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இத்தகைய சூழலில், ‘இஞ்சி வெல்லம்’ படத்தில் சாய்பல்லவியின் தங்கையாக அவர் நடிப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தற்போது ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத் திருநாளை ஒட்டிய தொடர் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி, சாய்பல்லவி, சரஸ்வதி மேனன் என நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம், ஜனவரி 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கத் தயாராகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் முன்னோட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Rajiv Menon’s Daughter Saraswathi Menon to Play Sai Pallavi’s Sister in ‘Inji Vellam’ – Vijay Sethupathi Starrer to Release on January 29!
Films directed by Mani Ratnam have always enjoyed a special place in the hearts of audiences, generating considerable expectations even before their release. Continuing this trend, ‘Inji Vellam’, starring Vijay Sethupathi and Sai Pallavi in the lead roles, has already created significant excitement among moviegoers.
The film features Vijay Sethupathi as the male lead and Sai Pallavi as the female protagonist. The combination of these two talented performers has further heightened audience expectations.
Adding to the excitement, an interesting casting update about the film has now emerged. Saraswathi Menon, daughter of renowned cinematographer and actor Rajiv Menon, will be seen playing Sai Pallavi’s younger sister in the film.
Saraswathi Menon has previously acted in a few Tamil films as well as Telugu cinema. She is currently playing the lead role in an upcoming Telugu film. Her inclusion in ‘Inji Vellam’ as Sai Pallavi’s sister is an interesting addition to the film’s cast.
Initially expected to hit theatres during the Pongal festive season, ‘Inji Vellam’ has now been officially announced for release on January 29. The release date has reportedly been planned around the consecutive holidays coinciding with the Thaipusam festival, offering audiences an extended festive period to enjoy the film in theatres.
With Vijay Sethupathi, Sai Pallavi and Saraswathi Menon coming together, ‘Inji Vellam’ is gearing up for its theatrical release on January 29. The film continues to generate curiosity among audiences, who are eagerly awaiting further updates and promotional announcements.
