Monday, November 9
Shadow

ரெஜினா நடிப்பில் கார்த்திக் ராஜூ இயக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்

திருடன் போலீஸ்’ & ‘உள்குத்து’ மாதிரியான தனிக் கவனம் அடைஞ்ச படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. இந்த ரெண்டு படங்களைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடித்த ‘கண்ணாடி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் இன்னும் ரிலீஸாகலை.

ஆனால், இதன் தெலுங்குப் பதிப்பான ‘Ninu Veedani Needanu Nene’-க்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்ச குறிப்பிடத்தக்கது.

ஆக அந்த ‘கண்ணாடி’ வெளியாகாத காரணத்தால் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கார்த்திக் ராஜு.

இப்ப முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் ஒரு கதையில் ரெஜினா ஒப்பந்தமானார். தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இன்னியில் இருந்து குற்றாலத்தில் தொடங்கிடுச்சு.

இந்த முதல் தயாரிப்பு குறித்து ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ராஜ் சேகர் வர்மா-கிட்டே கேட்டப் போது , “வித்தியாசமான தளத்தில், வித்தியாசமான பாணியில் பல இடங்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக கார்த்திக் ராஜுவின் கதை இருந்தது.


சமீபமாக நாயகியை மையமாக வைத்து நல்ல அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் ஜெயித்து வருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சி. த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது இவர் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கப் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்” அப்படீன்னார்