Tuesday, March 18
Shadow

ரிலீசுக்கு தயாராகும் றெக்க நாளை இசை வெளியீடு வசூலில் “ஆண்டவன்கட்டளை”

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் தான் தர்மதுரை வெளியானது. அதையடுத்து தற்போது ஆண்டவன் கட்டளை வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ஆந் திகதி றெக்க ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆக, விஜயசேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூல் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு, விஜய்சேதுபதியுடன் ரித்திகா சிங், நாசர், பூஜா திவாரியா, யோகிபாபு, சிங்கம் புலி என பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஜயசேதுபதியின் நடிப்பு, தயாரிப்பாளர் அன்பு செழியனை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.

அதையடுத்து ஆண்டவன் கட்டளை படமும், உங்களது நடிப்பும் எனக்கு மிக திருப்தியாக உள்ளது என்று சொல்லி விஜய்சேதுபதிக்கு தனது அன்பு பரிசாக ஒரு தங்க செயினை பரிசாக கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் அன்புசெழியன்.

றெக்க படத்தின் இசை நாளை வெளியீடு படம் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸ்

Leave a Reply