
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படம் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை சாயலில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தைப்போலவே நகரம், கிராமம் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் விஜய்.
அதாவது மெடிக்கல் கல்லூரி மாணவர், கிராமத்து இளைஞர் என இரண்டு விதமாக நடித்து வரும் அவர், நகரத்து இளைஞனாக நிறைய படங்களில் நடித்திருப்பதால், கிராமத்து வேடத்துக்காக நிறையவே மெனக்கெடுகிறாராம்.
மேலும், கத்தி படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததைப்போன்று இந்த படத்திலும் கிராமத்து வேடம் மூலம் விவசாயிகள் பிரச்னைகளை அவ்வப்போது சொல்கிறாராம் விஜய்.
குறிப்பாக, தெறி படத்தைப்போலவே இந்த படத்திலும் பஞ்ச் டயலாக் இல்லை என்று கூறப்பட்டபோதும், பல காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்துள்ளாராம்.
அதனால் அவர் அப்படி பேசியுள்ள வசனங்களை பஞ்ச் டயலாக்குக்கு இணையாக அமைந்திருப்பதாக பைரவா பட குழுவினர் சொல்கிறார்கள்.