Friday, June 2
Shadow

இன்று வெளியாகிறது “ரெமோ” படத்தின் ட்ரெய்லர்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ரெமோ. பி.சி.ஸ்ரீராம் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி சவுண்ட் எஞ்சினியராக ஒர்க் பண்ணியிருக்கிறார்.

பெண் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அந்த ரோலுக்கும் தானே டப்பிங் பேசியிருப்பதால் அந்த குரலை மெருகேற்ற நிஜ பெண் குரலாகவே மாற்றியிருக்கிறாராம் ரசூல்.

மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள், டீசர் ஆகிய வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தபடியாக ட்ரெய்லரை வெளியிட்டு இன்னொரு பரபரப்பை ஏற்படுத்துகிறார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில், செப்டம்பர் 19ஆந் தேதி இன்று மாலை 6 மணிக்கு யு-டியூப்பில் ரெமோ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Leave a Reply