Wednesday, January 14
Shadow

சாஹோ திரை விமர்சனம் Rank 3/5

பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இதை தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள பிரபாஸ் எடுத்துள்ள முயற்சியே இந்த படம் சாஹோ. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டராக இருந்து வருபவர் ராய் (ஜாக்கி ஷெரப்). இந்தியாவில் கோடிக்கணக்கான பணத்துடன் தனது பணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் இவர், அந்த நேரத்தில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது. அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டியும் தொடங்குகின்றது.

அப்போது பிரபாஸ் இந்த கேஸை கையில் எடுக்க, அதிரடியாக ஒரு திட்டத்தை தீட்டி அந்த ப்ளாக்பாக்ஸை பிரபாஸ் கைப்பற்ற, அதன் பின் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க, பிரபாஸ் யார், எதற்காக அந்த ப்ளாக்பாக்ஸை எடுத்தார், அதை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று கதை நீள்கின்றது.

படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே தான் இயக்குனர் சுஜித் நினைத்துள்ளாரே தவிர, படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டார் போல, அதிலும் படத்தின் முதல் பாதி, அட எப்படா இடைவேளை விடுவீர்கள் என்ற மனநிலைக்கு வந்த பிறகு வரும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றது.

இதில் பிரபாஸ் 2000 பேரை கொலை செய்கிறார். அவர் மீது 10 ஆயிரம் புல்லட் சுடப்படுகின்றது, அதில் ஒரு புல்லட் மட்டுமே அவர் மீது படுகின்றது மொத்த படத்தில், இதில் எந்த லாஜிக்கும் இல்லை.

படத்தின் ஆறுதலான விஷயம் கிளைமேக்ஸ் காட்சிகள், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், அடுத்தடுத்து வரும் திருப்பம் இது படம் முழுவதும் இல்லாதது பெரிய மைனஸ், மேலும், ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல், மதியின் ஒளிப்பதிவு தனித்துவம்.

படத்தின் பிளஸ்: பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு, படத்தின் கிளைமேக்ஸ்

படத்தின் மைன்ஸ்:  அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது.

மொத்தத்தில் ரூ 300 கோடி பணத்தை செலுத்து செய்து எடுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.