Sunday, December 8
Shadow

தமிழ் படங்களை தவிர்க்கும் சாய் பல்லவி

பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பிறகு தெலுங்கில் பிடா என்ற படத்தில் அறிமுகமானவார் அந்த படமும் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், தமிழில் அவர் அறிமுகமான தியா படம் தோல்வியடைந்து விட்டது. அந்த படத்தில் நடித்து வந்தபோதே சூர்யாவின் என்ஜிகே, தனுஷின் மாரி-2 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அதையடுத்து தமிழில் தன்னைத்தேடிவந்த சில படங்களை கதை பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்து விட்ட சாய்பல்லவி, தெலுங்கில் நடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது சர்வானந்துடன் நடித்து வரும் பாடி பாடி லீஷ் மனசு படத்திலும் முதன்மை ரோலில் நடிக்கிறார். இந்நிலையில், தற்போது வேணு உடுகுலா இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி.

ஆக, தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றி கிடைத்ததோடு, வெயிட்டான வேடங்களாக கிடைப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சாய்பல்லவி.