
சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Lakshmi Creations நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், இயக்குநர் சுகா இயக்கத்தில் உருவாகி வரும் கிராமத்து பின்னணியிலான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.
தினசரி வாழ்க்கையில் எளிய மக்களின் உண்மையான வாழ்வியலை அசல் தன்மையுடன் திரையில் பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக கொண்டு, ஒரு கிராமத்தின் முகமும் அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களும் புதுமையான காட்சியமைப்பில் ஃபர்ஸ்ட் லுக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தென் தமிழக கிராமத்தை பின்னணியாகக் கொண்டு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவையுடன் கலந்து, குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஒரு குடும்பக் கதையாக இப்படத்தை இயக்குநர் சுகா உருவாக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் இசக்கி கார்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி, மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது கிராமத்து மண்வாசனை மிக்க இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக குழு: கதை & இயக்கம் – சுகா
தயாரிப்பு – இசக்கி கார்வண்ணன்
இசை – இளையராஜா
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
ஒளிப்பதிவு – மார்ட்டின் டான்ராஜ்
கலை இயக்கம் – ஏ.என். இளங்கோவன்
சண்டை இயக்கம் – கனல் கண்ணன்
PRO – சதீஷ் (AIM)
“Sailappan Cycle Mart” First Look Released – Directed by Suga
The first look of the rural-based family entertainer “Sailappan Cycle Mart”, produced by Isakki Karvannan under the banner of Lakshmi Creations and directed by Suga, has been released. The first look was unveiled today by acclaimed director Vetri Maaran.
The film is crafted to realistically portray the everyday lives of simple people. Centered around a bicycle wheel, the first look creatively showcases the identity of a village, its people, temples, and cultural elements. The first look has received a positive response from fans and cinema enthusiasts.
Set in a village in South Tamil Nadu, the film presents a family-oriented story blended with humor, highlighting the lives and experiences of the villagers. Director Suga has designed the film as a wholesome family drama that audiences of all age groups can enjoy.
The film features Isakki Karvannan, M.S. Bhaskar, Ilavarasu, Moonar Ramesh, and director Subramania Siva in important roles. The supporting cast includes Pooja Mohanraj, Katha Nandhi, Surjith Gopinath, Vidhya Vijayakumar, Yashwanth, Santhana Lakshmi, Meenakshi Iyer, and many others.
Music for the film is composed by legendary composer Ilaiyaraaja. The team has expressed confidence that his rustic and soulful compositions will appeal greatly to the audience.
The shooting of the film has been completed, and post-production work is currently progressing rapidly. Official announcements regarding the audio launch and trailer release are expected soon.
Technical Team: Story & Direction – Suga
Producer – Isakki Karvannan
Music – Ilaiyaraaja
Editor – Suresh Urs
Director of Photography – Martin Danraj
Art Director – A.N. Ilangovan
Stunt Director – Kanal Kannan
PRO – Satheesh (AIM)
