ஜெயம் ரவி இறைவன் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் தான் ‘சைரன்’ இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ்க்கு இயக்கத்தில் இது படம். ஆனால் இவர் ஏற்கனவே விஷால் நடித்த இரும்பு திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். அதோடு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இந்த படங்களில் மிக அற்புதமான கதைகளும் வசனங்களையும் கொடுத்துள்ள இவர் நிச்சயம் ஜெயம் ரவிக்கு மிக பெரிய வெற்றியை கொடுப்பர். என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.அதற்க்கு ஒரே சாட்சி சைரன் படத்தின் டீசர் என்று தான் சொல்லணும்.
சைரன் டீசரில் ஜெயம் ரவி பரோலில் வருவது போல காண்பித்துள்ளார்கள். முதல் போஸ்டரில் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவர் போல காண்பித்து இருந்தனர். இந்த டீசரில் வயதான தோற்றத்தில் பரோலில் வருவது போல காண்பித்து உள்ளார்கள். இதன் மூலம் படத்தின் முக்கிய அம்சம் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த படத்தில் சமுத்திரக்கனி பார்க்கும் போதே ஒரு வில்லன் கதாபாத்திரம் போல இருக்கு இவர்களோடு இன்ஸ்பெக்டர் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் இளம் வயது ஜெயம் ரவியின் ஜோடி அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பேசும் போது இந்த படம் காஞ்சிபுரம் வட்டாரத்தில் நடக்கும் கதை என்றும் இவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பத்தை வைத்து தான் இந்த படத்தின் கதை கரு உண்டானது என்றும் கூறினார். ஆம்புலன்ஸ் போலீஸ் என்று இருப்பதால் இது அரசியல் படமா என்று கேட்டதற்கு இல்லை இது ராசியில் படம் இல்லை நம் வாழ்க்கையில் அன்றாளாம் சந்திக்கும் அரசியல் கலந்த படம் என்று படத்தின் கரு அறியாமல் இருக்க நம்மை குழப்பிவிட்டார்.என்று தான் சொல்லணும் இருந்தாலும் டீசர் நமக்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டுபணியுள்ளது.
சைரன் டீசர் மூலம் நமக்கு மிக பெரிய ஆவலை இயக்குனர் ஆண்டனி தூண்டியுள்ளார் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு மிக பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.