Tuesday, February 11
Shadow

4 வருடங்களுக்கு பிறகு இந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் சமந்தா – ரசிகர்கள் குஷி

சமந்தா – நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களது காதல், கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தாவுக்கும் – நாக சைதன்யாவுக்கும் இடையே திருமணம் நடந்தது.

சமந்தாவும் – நாக சைதன்யாவும் 2014-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படத்தில் தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தனர். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணையாத இவர்கள் திருமணமத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர்.

இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.