Tag: samantha
நடிப்பதை நிருத்த போகும் சமந்தா ஏன் தெரியுமா?
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னும் சமந்தா இரு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் அவர் நடித்துள்ள சில படங்கள் வெளிவர உள்ளன. அவர் நடித்துள்ள 'சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை' ஆகிய தமிழ்ப் படங்களும், 'மகாநதி' என்ற தெலுங்குப் படமும் விரைவில் வெளியாக உள்ளன. இவற்றைத் தவிர்த்து 'யு டர்ன்' என்ற ஒரு கன்னடப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.
வேறு எந்தப் புதிய படங்களிலும் நடிக்க சமந்தா சம்மதிக்கவில்லையாம். அவருக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். அதனால், புதிய படங்களை ஏற்க மறுப்பதாகவும் தகவல். தாய்மை அடைந்த பின் நடிப்பதை உடனடியாக நிறுத்திவிடவும் சமந்தா முடிவெடுத்துவிட்டாரா...
சமந்தா பற்றிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்
பிரதியுஷா பவுண்டேசன் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடை தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு, கைத்தறி நெசவாளர்களின நிலையை சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.
எல்லா நடிகர் நடிகைகளும் போலவே இதற்காக சமந்தா பெரும் தொகையை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டிஆர்., அதுபற்றி நேற்று கூறுகையில், இந்த பணிக்காக சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று தெரிவித்து, சமந்தா பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....
சிவகார்த்திகேயன் படத்தை முடித்த சமந்தா
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிது. `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது....
4 வருடங்களுக்கு பிறகு இந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் சமந்தா – ரசிகர்கள் குஷி
சமந்தா - நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களது காதல், கடைசியில் திருமணத்தில் முடிந்தது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தாவுக்கும் - நாக சைதன்யாவுக்கும் இடையே திருமணம் நடந்தது.
சமந்தாவும் - நாக சைதன்யாவும் 2014-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படத்தில் தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தனர். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணையாத இவர்கள் திருமணமத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர்.
இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீம...
சீமைக்கு ராஜாவான சிவகார்த்திகேயன்
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராம் படம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏற்கெனவே, சிவா – பொன்ராம் காம்போவில் ரிலீஸான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ மெகா ஹிட்டானது.
ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களிடை அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம். மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இதன...
விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'.
விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் பிரபலம் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்....
மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக ‘மெர்சல்’ 100 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சா...
கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சி...