Tuesday, April 21
Shadow

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிய சரவணன்

பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு ஏர்டெல் தேங்கஸ் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கை வெற்றிகரமாக முடித்து தர்ஷன், அபிராமி மற்றும் லோஸ்லியா வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசாக பிளாக் ஃபாரஸ்ட் கேக் வழங்கப்பட்டது

இதையடுத்து சரவணன் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார். சரவணுடன் பேசிய பிக்பாஸ், ‘மீரா மற்றும் சேரன் விவகாரம் பற்றி பேசும் போது பேருந்தில் ஆண்கள் பெண்களிடன் தவறாக நடந்து கொள்ளவே பயணிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்தது. அப்போது நீங்களும் உங்கள் கல்லூரி காலங்களில் இந்தை செய்திருப்பதாக கூறியிருந்தீர்கள்.

இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் எந்தவிதமான தவறாக அனுகுமுறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொடரக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் உடனே வெளியேற்றப்படுகீர்கள்’ என்று கூறினார்

இதைதொடர்ந்து சரவணன் மெயின் டோர் வழியாக அனுப்பப்படாமல் கன்ஃபெஷன் ரூமில் இருந்த மற்றொரு கதவு வழியாக வெளியே அனுப்பப்பட்டார் அவருடைய வெளியேற்றம் குறித்து மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது.

சரவணன் வெளியேற்றப்பட்ட செய்தியை பிக்பாஸ் இல்லத்தில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது.