
தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் எதிர்பார்ப்பு உள்ள படம் என்றால் தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படம் தான் இந்த படம் வரும் தீபாவளிக்கு சிங்களா வருகிறது படத்தின் படபிடிப்பு 90 சதவீதம் படபிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை பற்றி இந்த படத்தின் வில்லன் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் அண்ணாமலை. இந்த படத்தில் ராதாரவி வில்லனாக நடித்திருந்தார். அவர் அடிக்கடி கூட்டிக்கழிச்சிப்பாரு கணக்கு சரியா வரும் என்ற ஒரு டயலாக்கை அடிக்கடி சொல்வார். ஆனால் ஒருகட்டத்தில் அவரிடம் அதே டயலாக்கை ரஜினி திருப்பிப்பேசுவார்.

அதேபோல் இப்போது விஜய்யின் சர்கார் படத்திலும் வில்லனாக நடித்து வரும் ராதாரவி பல காட்சிகளில் ஒரே டயலாக்கை ரிப்பீட்டு செய்வாராம். ஆனால் கிளைமாக்சில் அந்த டயலாக்கை அவரிடமே திருப்பி பேசுவாராம் விஜய். இந்த காட்சி அண்ணாமலை படத்தைப்போன்று சர்காரிலும் இடம்பெற்றிருப்பதாக தான் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ராதாரவி.
