
வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது தற்போது ஒரு ஸ்டைலை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ஆகிவிட்டது ஆம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் மூன்று பேர் எடுக்கிறார்கள் இதற்கு நடுவில் ஒருவர் சசிகலா வாழ்க்கை வரலாறு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது ரவுடி பேபி தான் நடிக்கிறார்.
மாரி 2 படத்தை அடுத்து மலையாளத்தில் பகத்பாசில் உடன் அதிரன் படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த நிலையில், தியா படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
அந்த செய்தியை மறுத்துள்ளார் சாய்பல்லவி. தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பது சம்பந்தமாக இதுவரை விஜய் என்னை அணுகவில்லை. அதோடு, சசிகலாவாக நடிப்பதற்கு ஏற்ற முகம் என்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அதையும் மீறி என்னை நடிக்குமாறு இயக்குநர் வற்புறுத்தினால் அப்போது அதுபற்றி யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

