Sunday, May 19
Shadow

செல்ஃபி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு முட்டல் மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி திரைப்படத்தின் ஒன் லைன்.

கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்ஃபி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார். அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்ட்டான நடிப்பு நம்மளை கதையுடன் ஒன்றிணைகிறது. காலேஜில் மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும் வேலைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி-க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், உறுத்தலாக இல்லாமல் உள்ளார். படம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது, ஹீரோ பில்டப்பிற்காக கதையை விட்டு வெளியே செல்லாமல் கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

முதல் பாதி ஜிவி என்றால் இரண்டாம் பாதியை கௌதம் வாசுதேவ் மேனன் கைப்பற்றுகிறார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் லுங்கி மற்றும் கத்தியுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் படு மாஸாக உள்ளது. முழுவதும் நெகட்டிவ் சேட் இல்லை என்றாலும், தன் பாணியில் சிறப்பாக கையாண்டு உள்ளார். கதை முழுவதிலும் ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. ஜிவி-ன் நண்பனாக நடித்து இருந்து அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் குணா நன்றாக நடித்து உள்ளார்.

படத்தின் பிளஸ்:
பின்னணி இசை, அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் குணா

படத்தின் மைன்ஸ்:
ஊர்க்காரன் பாடல் மனதில் நிற்கும் அளவிற்கு மற்ற பாடல்கள் எதுவும் நிற்கவில்லை,

மொத்ததில் செல்ஃபி ஒரு முறை பார்க்கலாம் என்ற ராகமே.