கார்த்திக் நரேன் என்ற 22 வயது இளைஞன் “துருவங்கள் பதினாறு” திரைபடத்தை தமிழில் தயாரித்து இயக்கினார். வித்தியாசமான திரில்லர் கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் சமீபத்தில் தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெற்று இப்படத்தின் கதாநாயகன் ரகுமானுக்கும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் சமூக வலைதளங்கள் மற்றும் ரகுமான் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் இருந்தது. இந்த எதிர்பார்ப்பினையொட்டி துருவங்கள் பதினாறு மொத்த கேரளா உரிமையை தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் “Writer Imaginations” உரிமையாளர் மஹாவிஷ்ணு வாங்கியுள்ளார்.
வருகிற மார்ச் 10-ஆம் தேதி மஹாவிஷ்ணு மற்றும் கேரளாவின் முக்கிய விநியோகஸ்தரான ஷிபு தமீன் இருவரும் இணைந்து கேரளாவின் மிக முக்கிய திரையரங்குகளில் துருவங்கள் பதினாறு திரைபடத்தினை வெளியிடவுள்ளனர். இந்த வெளியீடு பற்றிய செய்திகள் மற்றும் போஸ்ட்டர்கள் மாபெருமளவில் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது.