மதிவாணன் இயக்கத்தில் அர்ஜை, சிவ ஷா ரா, ஆஷிக், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் இந்த “ஷுட் தே குருவி
சில புதுமுகங்கள் ஒரு சில தெரிந்த நட்சத்திரங்கள் நடித்து இருக்கும் இந்த குறும் படம் பற்றி பார்ப்போம்.
கதையில், இரண்டு கேரக்டர்கள் தனித்தனியாக உலா வருகின்றனர். அதில் ஒருவர் கேங்க்ஸ்டர் அர் ஜை, இரண்டாவதாக வருபவர் ஆஷிக். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை.
சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து வந்து நிற்பவர் அர்ஜை. காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு அசுர பலமாக நிற்கிரார் அர் ஜை.
தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஆஷிக். அவரது கனவில் தோன்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார்.
அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக அர்ஜையை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஆஷிக்.
அதன்பிறகு, அர்ஜை மற்றும் ஆஷிக் வாழ்வில் என்ன நடந்தது என்பது தான் இக்குறும்படத்தின் மீதிக் கதை.
காமெடியான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் தனது உடல்மொழியிலும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஆஷிக். இருந்தாலும், ஓரிரு இடங்கள் சற்று சீரியஸ்னஸை புரிந்து கொண்டு தனது கேரக்டரை கொடுத்திருந்தால் இன்னும் கூடுதல் நலம் பெற்றிருந்திருக்கலாம்.
கேங்க்ஸ்டராக வரும் அர்ஜை, மிரட்டல் பார்வையில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். அவரின் வாழ்க்கை பயணம் சுவாரஸ்யமான ஒன்று. சற்று மீட்டரை குறைத்து நடித்திருந்தால் கேங்க்ஸ்டர் மனதில் நிலையாக நின்றிருந்திருக்கலாம்.
சா ரா மற்றும் ஆஷிக் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. அம்மா செண்டிமெண்ட் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
க்ளைமாக்ஸில் ராஜ்குமார் மூலமாக வைத்த ட்விஸ்ட் காட்சி ஆச்சர்யம். மூன்ராக்ஸின் பின்னணி இசை கேங்க்ஸ்டர் காட்சிகளுக்கு மாஸ் கொடுத்துள்ளது.
பிரண்டன் சுஷாந்த் அவர்களின் ஒளிப்பதிவு நச். க்ளைமாக்ஸ் காட்சியில் அடுத்தடுத்த வந்த ட்விஸ்ட் காட்சிகள் அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறது.
வழவழவென்று இழுத்தடிக்காமல் சொல்ல வந்ததை நச் என தனது திரைக்கதை பாணியில் சொல்லி முடித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார் இயக்குனர் மதிவாணன்.