Friday, October 11
Shadow

AAA இயக்குனருடனும் மோதும் சிம்பு இப்படி பண்றது சரியில்ல! ஆதிக் மோதல்!

என்னடா எந்த பிரச்னையும் இல்லாமல் போகுதே என்று பார்த்தல் ஆரம்பம் ஆனது சிம்புவின் திருவிளையாடல் சும்மாவே அடங்காத சிம்புக்கு டைட்டில் வேற இப்படி அன்பானவன்அடங்காதாவன் அசராதவன் சும்மா இன்னும் தலை விரித்து ஆடுவார் என்னடா ஒன்னும் இல்லாமல் முக்கால்வாசி படம் முடியபோதே என்று நினைக்கும் பொது தானே நம்ம ஆளு ஆட்டம் ஆரம்பம் ஆகும் அது போல இப்பவும் வாங்க தெளிவா பார்க்கலாம் ,

பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது…’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி… இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மண்ணுளிப் பாம்புகளின் படம் எடுப்பால் மாரடைப்பு வந்த தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக் ரவிச்சந்திரன் அப்படிப்பட்டவரா தெரியாது. ஆனால் படத்தின் ஹீரோவான சிம்புவை நெம்பு நெம்பென நெம்பி விட்டாராம்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடங்காத மத யானையான சிம்புவை வைத்து 90 சதவீத படத்தை முடித்துவிட்டார். பொதுவாக எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் அலைய விடும் சிம்பு, இந்தப்படத்தில் மட்டும் அவ்வளவு கோ ஆப்ரேஷ்ன் கொடுக்க, இன்டஸ்ட்ரிக்கே பெரும் திகைப்பு. எப்படியோ படம் வளர்ந்து நிற்கிறது. இந்த நேரத்தில்தான் சிம்பு அந்த பொல்லாத வேலையை செய்துவிட்டார்.

எட்டெட்டு வார்த்தைகளாக எழுதி, இன்டஸ்ட்ரியே எங்க கையுலதான் என்று வீராப்பாக திரியும் சில ட்விட்டர் புரமோட்டர்களை அழைத்து அஅஅ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளை போட்டுக் காட்டிவிட்டாராம். இந்த விஷயம் சற்று தாமதமாகதான் தெரிய வந்ததாம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு. ஹீரோங்கறதாலதான் ஒரு காப்பி உங்களுக்கு அனுப்பி வைச்சேன். அதை ஊர் முழுக்க காட்றதுக்காக இல்ல. படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியுலகத்திற்கு காண்பிக்கிற முதல் அதிகாரம் டைரக்டருக்குதான் உண்டு. இந்த படத்திற்கு நீங்க டைரக்டரா நான் டைரக்டரா என்று கேட்க, சிம்புவா அடங்குவார்.

“தம்பி… போ போ… போய் வேலைய பாரு” என்றாராம். கொசு போட்ற கூச்சலுக்கெல்லாமா கொம்பேறி மூக்கன் பயப்படும்?

Leave a Reply