Tuesday, October 27
Shadow

பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பிறந்த தினம் பதிவு

‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா , இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஆறு முறை தேசிய விருதையும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும்’ எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களில் என்றென்றும் புகழ்பெற்று விளங்கும் கானக்குயில் சித்ராவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

இவர் பாடிய பாடல்கள் தமிழ் பாடல்கள்

‘பூஜைகேத்த பூவிது’, ‘துள்ளி எழுந்தது பாட்டு’, ‘ஒரு ஜீவன் அழைத்தது’, ‘நானொரு சிந்து காவடி சிந்து’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தென்கிழக்கு சீமையிலே’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பட்டு’, ‘ஊலலலா’, ‘கண்ணாளனே எனது கண்ணை’, ‘எங்கே எனது கவிதை’, ‘அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை’, ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘இன்னிசை பாடிவரும்’ போன்ற பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

சித்ராவை தாக்கிய துயரம்

துபாயில் இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் சென்றிருந்தார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக தன்னுடைய ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தாள். இந்த இழப்பைத் தாங்க முடியாமல் பாடுவதையே சிறிது காலம் நிறுத்தி இருந்தார்.