
பைரவா, பைரவா என்று அடிக்கடி சொல்லப்பட்டு இன்று அமர்க்களமாய் உலக முழுவதும் வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் நேற்றே வெளிநாடுகளில் திரையிடப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதலே படங்கள் தமிழகத்தில் திரையிடைப்பட்டது.
ஆனால் நேற்றிலிருந்தே காத்திருக்க முடியவில்லை என பல ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். சமூக வலைத்தளங்கள் முழுக்க பைரவா படம் குறித்த விஷயங்கள் தான் இருப்பதை பார்க்கக் முடிகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சாம்ஸ், இயக்குனர் வெங்கட் பிரபு, வி ஜே அஞ்சனா ஆகியோர் பைரவா படத்தை வரவேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு அப்படத்தில் நடித்த காமெடி நடிகர் சதிஷ் நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளார்.

