Saturday, September 24
Shadow

KJR புரொடகஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் அக்டோபர் 2021 ல் வெளியாகிறது !

KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ், சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து வழங்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 2021 ல் வெளியாகிறது !

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productions ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், படம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாவது…

“டாக்டர்” திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. “டாக்டர்” திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் “டாக்டர்” திரைப்படத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் வெளியீட்டுக்காக காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது. இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில் “டாக்டர்” திரைப்படத்தை தியேட்டர்களில் கொண்டு வருகிறோம். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தை புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் “டாக்டர்” திரைப்படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

SK Productions இணை தயாரிப்பாளர் கலை அரசு கூறியதாவது..
எங்களின் “டாக்டர்” படம் தியேட்டரில் வெளியாவது, குழுவில் உள்ள அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. KJR Studios தயாரிப்பில் கோட்டபாடி J ராஜேஷ் அவர்களின் துல்லியமான திட்டமிடல் மற்றும் தியேட்டர் வெளியீட்டில் உறுதியாக அவர் இருந்ததற்கு நன்றி. ஒரு தொற்றுநோய் பரவிய கடினமான காலங்களில், நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட சமரசம் செய்து, OTT வெளியீட்டில் படத்தை வெளியிட அணுகிய போதும், அவர் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இத்திரைப்படம் இருக்கும் என்று இந்த திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்தார். சிவகார்த்திகேயன்-இயக்குநர் நெல்சன் திலீப்குமார்-அனிருத் ஆகிய மூவரின் கூட்டணி ரசிகர்களுக்கு 100% சிறப்பான பொழுதுபோக்கு சினிமா அனுபவத்தை தந்து, அரங்குகளை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. SK Productions “டாக்டர்” வெளியீட்டின் நன்நாளுக்காக காத்திருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ‘டாக்டர்’ பார்க்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை அனுபவிக்க, நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பம்பர் ஹிட்டாகியுள்ளது. ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார்.

KJR Studios Kotapadi J Rajesh in association with Sivakarthikeyan’s Sivakarthikeyan Productions
Nelson Dilipkumar directorial
Sivakarthikeyan’s Doctor is all set for grand worldwide theatrical release in October 2021

Sivakarthikeyan starrer “DOCTOR” has been one of the much-anticipated flicks among the trade circles and general audiences. While there have been lots of buzzes rounding upon air over its release, KJR Studios and SK Productions have a piece of gleeful news to reveal. Yeah! The movie is all set for a worldwide theatrical release in October 2021.

Producer Kotapadi J Rajesh, KJR Studios, says, “From day 1 of Doctor, I was very clear that this movie is a theatrical experience, not for the grandeur or scale, but for the collective experience that the theatre offers for a dark humour film such as this. Unfortunately, COVID 19 changed all our plans & calculations. While I had a ready film in hand and active talks were on with various OTT platforms, bringing Doctor to the Big Screen was always my first choice. It was a tough decision to wait it out amidst all the uncertainties and the pressure from fans & the industry. I’m glad things are working out now & we’re bringing Doctor to you in theatres. The film will be a very different experience for the fans & we hope it helps the theatre owners, distributors and all key stake holders revive their business too.”

Kalai Arasu, Co-Producer, SK Productions, says, “It’s indeed a happy moment for everyone in the team as the movie is gearing up for the theatrical release. I thank producer Kotapadi J Rajesh of KJR Studios for his scrupulous planning and sticking to the firm decision over the release. In the hard times like a pandemic, which let even the biggest production houses across the country compromise and settle with OTT releases, he religiously inclined to the faith on this movie that it’s a tailor-made treat for universal audiences in the theaters. The combination of Sivakarthikeyan-Director Nelson Dilipkumar-Anirudh trio is sure to enthrall the cinema halls with 100% entertainment. We at SK Productions are looking forward to the big day of release and relish the joyful experience of watching ‘Doctor’ together with fans and audiences in theatres.”

Written and directed by Nelson Dilipkumar, Doctor is produced by Kotapadi J Rajesh of KJR Studios in association with Sivakarthikeyan of Sivakarthikeyan Productions. With Sivakarthikeyan playing the lead character, Priyanka Arul Mohan essays the female lead, and Vinay Rai essays the antagonist’s role. Anirudh Ravichander’s songs are already Chartbuster hits. The cinematography is handled by Vijay Karthik Kannan and R. Nirmal is the editor.