

தன் நம்பிக்கை பேச்சாளார் எ.எல்.சூர்யா யார் இவர் தேவகோட்டை சேர்ந்தவர் இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் பொறியாளர் பெட்ரோ கெமிகல்ஸ் நிறுவனத்தில் இருந்தவர். இவருக்கு அனால் இந்த துறை மீது நாட்டம் இல்லை சினிமா சினிமா என்றே தன கனவை வளர்த்து இருக்கிறார் அதற்கு பல போராட்டங்களை சந்தித்துள்ளார்.
பின்னர்இசை மீது உள்ள நாட்டம் மீண்டும் சினிமா பக்கம் அவரை இழுத்தது ஆனால்சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை இதனால் அவர் மனம் நோந்துவிடாமல் சினிமாவின் ஆணி வேர் பணம் பணம் இருந்தால் தனி பட்ட முறையில் நம் சுதந்திரத்துக்கு செயல்பட முடியும் என்று பணம் சாம்பிதிக்க முடிவு செய்த சூர்யா தனக்கு இருக்கும் திறமையான தன்னம்பிக்கை பேச்சாளராக திகழ்ந்தார் பணம் சாம்பாதிக்க என்ன வழி என்று தனக்கு தானே சில வெற்றி பாதையை கண்டுபிடித்து அதை தான் மட்டும் செயல்படுத்தாமல் பலருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணத்தில் இதை அனைவருக்கும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் இவருக்கு மிக பெரிய அளவில் இவரின் இணையதளத்தை பின் தொடர ஆரம்பித்துள்ளனர் இதன் மூலம் பல நாட்டில் உள்ள மிக முக்கிய வி ஐ.பி.கள் இவரின் திறமையை கண்டு வியந்துள்ளனர். இதன் மூலம் பலர் பயன் அடைந்துள்ளனர் அதோடு இவருக்கு புகழோடு பணம்மும் கொட்ட ஆரம்பித்துள்ளது இதன் மூலம் பல நூல்கள் எழுத ஆரம்பித்துள்ளார் அதும் மிக பெரிய அளவில் இவருக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது.
அப்படி இவர் எழுதிய ஒரு நூல் தான் ’அனிதா பத்மா பிருந்தா’ இந்த நூல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது அதோடு இந்த நூல் அவரை மிகவும் பாதித்துள்ளது சில விஷயங்கள் அவருக்கு இந்த நூலில் உள்ள சம்பவங்கள் இவரின் நிஜ வாழ்கையில் நடந்தும் உள்ளது ஆகவே இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது அதற்கான முதல் கட்ட பணியில் தற்போது அவர் இறங்கியுள்ளார் .
பல ரகசிங்கள் புதைந்து கிடக்கும் சினிமாவைப் பற்றி சிலர் கூறும் உண்மைகளால் அவ்வபோது சில சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அந்த வகையில், ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் பல கசப்பான மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிர்ச்சியூட்டும் பலான மேட்டர்களை பற்றியும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நாவலை, சினிமாத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நாவல் தற்போது திரைப்படமாகிறது. இதை எழுதிய
ஏ.எல்.சூர்யாவே இப்படத்தை எழுதி இயக்குவதோடு, இசையமைத்து ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார்.
சினிமாத்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியவர், அதை சினிமாவுக்கான பரபரப்பான திரைக்கதையாகவும்எழுதி முடித்திருப்பவர், தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்படத்திற்காக முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்திருப்பவர், படத்தில் வரும் 4 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரது நிஜ வாழ்க்கையில் நடந்த இனிப்பான மற்றும் கசப்பான சம்பவங்கள் படத்தில் நிறைந்திருக்கும் என்பதால், இப்படத்தின் மீது கோலிவுட்டின் பிரபலங்களின் பார்வை பட ஆரம்பித்துவிட்டது. மேலும், இப்படம் வெளியானால் யாரை பற்றி, எந்த மாதிரியான உண்மை தெரிய வருமோ!, என்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அலர தொடங்கிவிட்டார்கள்.
ஏற்கனவே இவரது ’அனிதா பத்மா பிருந்தா’ நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அது திரைப்படமாக உருவாகும் போது, இந்திய சினிமா அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஏ.எல்.சூர்யா, ’ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, ’பணமே…பணமே…ஓடி வா’, ’பேராற்றல் படைத்தவர்களே…எழுந்திருங்கள்’, ‘கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?’ ஆகிய நூல்களை எழுதி இலக்கிய உலகில் பிரபலமானவராக திகழ்வதோடு, தனது மோட்டிவேஷன் வீட்டியோக்கள் மூலம் யூடியூபில் பிரபலமானவராக இருக்கிறார்.
பி பாசிட்டிவ் என்ற தனது யூடியூப் சேனல் மூலம் இவர் வெளியிட்டிருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீட்டியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
