
கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிருஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் திவ்யன்ஷா கவுசிக் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது முப்தி பட ரீமேக்கில் பிசியாக இருக்கும் நடிகர் சிம்பு, நிவாஸ் பிரசன்னா ஸ்டுடியோவுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து பாடி கொடுத்துள்ளார்.
நடிகர் எஸ்டிஆர் விரைவில் அரசியல் கதை கொண்ட படமான மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
