Wednesday, October 28
Shadow

நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல்?

நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாட்டு வெயிட்டு உரிமையை ஜெமினி பிலிம்ஸ் சர்க்கியூட் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம், பொருளாதார பிரச்சினை காரணமாக, மணிரத்னம் இயக்கிய கடல் படத்திற்கு பின் வெயிட்டு உரிமை பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட மத கஜா ராஜா படம் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாட்டு வெயிட்டு உரிமையை பெற்றுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதும் நிறுத்தி வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.